At Perambalur, Tamil Nadu Day Awareness Rally, Photo Exhibition: Collector Inaugurated!

தமிழ்நாடு நாள் விழாவை மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் க.கற்பகம், இன்று பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன், முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் 1956-ல் பல நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இறந்தார். பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது 18 சூலை 1968 ஆம் ஆண்டு சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்றம் செய்து சட்டமன்றப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

சூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.
அதன் அடிப்படையில் பெரம்பலுார் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை நடத்தினார்

500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். பெரம்பலுார் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவுற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவிகள் தமிழ்மொழி குறித்தும், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் க.கற்பகம், திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்ட வரலாறு, அதற்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை விளக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இன்று முதல் 23.07.2023 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியினை பள்ளி-கல்லுாரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் வருகை தந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், டி.ஆர்.ஓ.ந.அங்கயற்க்ணணி, டி.ஆர்.டி.ஏ பி.ஓ அ.லலிதா, நகராட்சித் தலைவர்அம்பிகாராஜேந்திரன், ஊராட்சி யூனியன் சேர்மன்கள் பெரம்பலுார் மீனாஅண்ணாதுரை, வேப்பந்தட்டை க.ராமலிங்கம், உள்ளிட்ட அரசாங்க பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!