At the Perambalur Collector’s Office, 220 people filed a petition at the public grievance day meeting.

ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது.

பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 220 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களிடம் பெற்ற மனுக்களுக்கு, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் வெங்கடபிரியா அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!