பெரம்பலூர் அருகே இரு இடங்களில், பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை!

schedule
2020-02-18 | 17:04h
update
2020-02-18 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

At two locations near Perambalur, Venture robbery broke house lock!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி கார்த்திகேயன் (வயது 37), பெட்டி கடை நடத்தி வருகிறார். இன்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு மாலை சுமார் 4.30 மணிக்கு வந்த பார்த்த போது, வீட்டை பூட்டியிருந்த பூட்டு இல்லாமல் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4பவுன் தங்கசங்கிலி, ஒரு பவுன் மோதிரம், 2 அரைபவுன் மோதிரம், தோடு ஜிமிக்கி மாட்டல், 2 பவுன் கல்தோடு, முக்கால் பவுன் மூக்குத்தி என சுமார் 10 பவுன் தங்கநகைளும், ரொக்கம் ரூ. 5500-யையும், கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும், தடய அறிவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.இது வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

இதே போன்று இன்று மதியம் அயிலூர் கிராமத்தைச் சேர்ந்த மருதை மகன் பெருமாள் (வயது 55) . விவசாயி. இவர், காலை வயலுக்கு சென்று விட்டு மதியம் சுமார் 12.30 மணியளவில் வந்த பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்கை ரொக்கம் சுமார் ரூ. 80 ஆயிரத்தை எடுத்து சென்றனர். பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பீரோ புள்ளிங் கொள்யைர்களை தீவிரமா தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 01:38:24
Privacy-Data & cookie usage: