ஈரோடு அருகே சினிமா போன்று தம்பதியினரை தாக்கி 12 சவரன் தங்க நகை கொள்ளை!

schedule
2018-05-30 | 19:06h
update
2018-12-22 | 08:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Attacked the couple like cinema near Erode 12 pound gold jewelry robbery: Police Investigation

ஈரோடு அருகே சினிமா போன்று தம்பதியினரை தாக்கி 12 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு நாதகவுண்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஜவுளி மொத்த வியபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டு பணிகளை சிவக்குமார் முடித்து விட்டு தூங்கி கொண்டு இருந்துள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து இரவு 12மணிக்கு காரில் வந்த சில மர்ம நபர்பகள் சிவக்குமாரின் கதவை தட்டி உள்ளனர். இதனையடுத்து கதவை திறந்து பார்த்த சிவக்குமாரை மர்ம நபர்கள் தாக்கி அவரை வீட்டின் உள்ளே அழைத்து சென்றனர். இதன் பின்னர் சிவக்குமார் மனைவி லிலதா கழுத்தில் இருந்த தாலி – செயின் என 8 பவுன் தங்க நகைகள் மற்றும் சிவக்குமார் அணிந்திருந்த 4பவுன் தங்க நகைகளை மூகமுடி அனிந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு வீட்டின் பின்புறம் அவர்கள் வந்த காரில் ஏறி சென்றுவிட்டனர்.

மர்ம நபர்கள் நேற்று காலை சிவக்குமார் தகவல் கொடுத்த பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தலுக்கா போலீசார் சம்பவ இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

இதே போல் ஓடக்காட்டு வலசு பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தாய் – மகனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றனர். இப்படி சினிமா போன்று தொடாந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Erode
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.07.2026 - 16:17:54
Privacy-Data & cookie usage: