பெரம்பலூரில், குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை  முயற்சி: குழந்தை பலி! தாய் உயிருடன் மீட்பு!!

schedule
2019-12-25 | 15:29h
update
2019-12-25 | 15:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Attempt to commit suicide by jumping into mother well with baby: baby kills Mother alive Rescue !!

பெரம்பலூர் மாவட்டம், அ.குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது ( 35). பெரம்பலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்பரசி (வயது 31) இவரும் பெரம்பலூரில் உள்ள கல்வியியல் கல்லூரியில் விரிரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, ஹன்சிகா ( வயது 4) மேகாஸ்ரீ (எ) கோமதி என்ற 1வயது 2 மாத கைக்குழந்தையும் உள்ளது. பெரம்பலூரில் உள்ள எம்.ஆர் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், குடும்பத்தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த அன்பரசி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக குதித்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு தாய் மற்றும் குழந்தையை காப்பற்ற முயன்றனர். இதில், குழந்தை மேகாஸ்ரீ பரிதாபமாக உயிழந்தது. தாய் அன்பரசி மட்டும் காப்பற்றப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக தாய், குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.03.2026 - 10:59:06
Privacy-Data & cookie usage: