Auction at Chettikulam Small Onion Business Complex: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

செட்டிகுளம் வேளாண் வணிக வளாகமானது தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.114.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு 27.06.2014 அன்று அன்றைய மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வெங்காய வணிக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. இவ்வணிக வளாக ஏலத்தில் இதுவரை 10,362 விவசாயிகள் தாங்கள் விளைவித்த 2250.12 மெ.டன் சின்ன வெங்காயத்தினை ஏலத்தில் விற்று பயனடைந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.425.86 லட்சம் ஆகும்.

சமீப காலத்தில் வெங்காய விலையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தின் காரணமாக செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்திற்கு ஏலத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து போனது. அதனால் ஏலம் தொடா;ந்து நடைபெறவில்லை. ஆனால் தற்பொழுது மீண்டும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. செட்டிகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சின்ன வெங்காயத்தினை செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்று பயனடையலாம்.

மேலும் சின்ன வெங்காயத்தினை தாளில் இருந்து பிரித்து எடுப்பதற்கும்; சேமித்து வைப்பதற்கும் இடவசதி இல்லாத விவசாயிகள் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) ஆகியோர்களை 9942381099 மற்றும் 7010628819 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு, வணிக வளாகத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!