வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் பெரம்பலூரில் ஏலம்!

schedule
2018-12-04 | 14:28h
update
2018-12-04 | 14:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Auction in Perambalur
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.தங்கவேலு விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 11.12.2018ம் தேதி காலை 11.00 மணி முதல் பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) ஆகியோர் முன்னிலையில் 7 எண்ணிக்கையிலான இரண்டு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படும். பெரம்பலூர் &அரியலூர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் பிறரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

Advertisement

மேற்படி ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ.1,000/- காப்பீட்டு தொகை செலுத்தி தங்களது பெயர், முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவருக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வானத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகையுடன் சேர்த்து வாகன எண் மறுபதிவு, கழிவு பொருளாக எடுக்கும் பட்சத்தில், பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

காப்பீட்டு தொகை கழித்துக்கொள்ளப்படும்.
மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் காப்பீட்டுத் தொகை திருப்பி தரப்படமாட்டாது. ஏலம் ரூ.100/-இன் மடங்கில் கேட்கப்படவேண்டும்.

வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது.

ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை.

வாகனங்களை டிச.11ம் தேதி காலை 08.00 மணிமுதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவரவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல்பிரிவு. அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04328-225023 9443629319 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 09:39:05
Privacy-Data & cookie usage: