வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்: பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி பாண்டியன் தகவல்.

schedule
2022-11-05 | 15:30h
update
2022-11-05 | 15:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Auction of seized vehicles in cases: Perambalur ADSP R.Pandian informs.

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் காவல் துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசு உடைமையாக்கப்பட்ட 12 இரண்டு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 14 வாகனங்களை வரும் நவ. 10 அன்று காலை 10.00 மணிமுதல் ஆயுதப்படை வளாகத்தில், தனது (ஏடிஎஸ்பி பாண்டியன்) முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

Advertisement

இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9498159048, 9790680013 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 5,000-ம் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 10,000 ம் வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை 08.11.2022 முதல் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் புளுவு சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும், பெறப்பட்ட வைப்புத் தொகை கழித்துக் கொள்ளப்படும்.

வாகனங்களை 09.11.2022ம் தேதி காலை 10.00 மணிமுதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 06:09:27
Privacy-Data & cookie usage: