வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டட வாகனங்கள் ஏலம்: பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி மணி

schedule
2022-01-18 | 15:58h
update
2022-01-18 | 15:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Auction of vehicles seized in cases: Perambalur Police SP Mani information

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 102 சி.ஆர்.சி.பி சட்டப் பிரிவின் கீழ் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனம் மற்றும் 156 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 166 வாகனங்களையும் 27/01/2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்கள் தலைமையில் பொது ஏலம் விட்டு ஏலத் தொகையை அரசு ஆதாயம் ஆக்கப்பட உள்ளது.

Advertisement

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 2 சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 1000-மும் 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூபாய் 2 ஆயிரமும் காப்பீட்டுத் தொகையாக செலுத்தி தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். உடனிருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது.

அதிகபட்ச விலைக்கு வாகனங்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் ஏலத்தொகை + ஜி.எஸ்.டி யுடன் சேர்த்து பிற்பகல் 03.00 மணிக்கு உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் செலுத்திய காப்பீட்டு தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் தாங்கள் கட்டிய காப்பீட்டு தொகையை திருப்பித் தரப்படமாட்டாது. ஏலம் ரூபாய் 100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன், வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும் பதிவு செய்து வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.

பொது ஏலத்தில் காவல் துறையைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வாகனங்களை ஜன.19 முதல் 26 வரை நேரில் ஆயுதப் படை மைதானத்தில் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். ஏலம் எடுக்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:15:37
Privacy-Data & cookie usage: