பெரம்பலூர் அருகே ஆடி கார் மோதி விபத்து வாலிபர் பலி!

schedule
2016-11-07 | 01:07h
update
2026-06-27 | 06:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Audi car collided near the Perambalur the young men killed in the accident!

பெரம்பலூர் அருகே உள்ள சின்னாறு அருகே ஆடி கார் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானர்.

சென்னையை சேர்ந்த சுரேஷ்(28) என்பவர் விருதுநகர் மாவட்டம், அருப்பு கோட்டைக்கு சென்றுவிட்டு திருச்சி வழியாக சென்னைக்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். நண்பகல் 1 மணி அளவில் கார் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

Advertisement

அப்போது, எறையூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் அருண்குமார் (28), தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது சுரேஷ் ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளனாதில் சம்பவ இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 06:09:06
Privacy-Data & cookie usage: