ஆகஸ்ட் 16 விவசாயிகள் போராட்டம் : பெரம்பலூரில் அனைத்து கட்சி விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

schedule
2017-08-04 | 15:01h
update
2026-07-03 | 07:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

August 16 Farmers Struggle: All party farmers consultation meeting in Perambalur.

பெரம்பலூர் : தமிழ்நாடு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அனைத்துக் கட்சி விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 16 ல் போராட்டம் நடத்த அறிவித்தது.

Advertisement

அதனையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எஸ்.தங்கராசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் திமுக குன்னம் சி.ராஜேந்திரன், சிபிஐ வீ.ஞானசேகரன், விசிக தமிழ்மாணிக்கம் விவசாயிகள் சங்கம் சித்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனைத்து விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் கரும்பு நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பாரபட்சமின்றி வழங்கவேண்டும், பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலை இணைமின்சார திட்டத்தினை உடனே தொடங்கி ஆலை விரிவாக்கப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள போராட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎம் நிர்வாகிகள் எ.கணேசன், பி.ரமேஷ், பி.கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 07:18:02
Privacy-Data & cookie usage: