பெரம்பலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து : தொழிலாளி பலி

schedule
2018-03-01 | 14:21h
update
2026-07-05 | 00:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Auto collapses near Perambalur accident: Worker kills

பெரம்பலூர் அருகே இன்று மாலை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல் உடைக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவிக்கு சுமார் 10 பேருடன் ஷேர் ஆட்டோ ஒன்று, இன்று மாலை சென்றுக் கொண்டிருந்தது. பெரம்பலூர் நகர் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த ஷேர் ஆட்டோ எதிரே இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு வழிவிட ஒதுங்கிய போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை ஷேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ பயணம் செய்த திருச்சி மாவட்டம், அய்யம்பாளையம் அருகே உள்ள தெற்கு திருபத்தூரை சேர்ந்த துரைசாமி மகன் நாகராஜன் (வயது 30), என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜன் அவரது மனைவி மம்தா மற்றும் குழந்தைகளுடன் பேரளியில் உள்ள உறவினர் வீட்டு விசேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , வடக்குமாதவியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் போது இந்த விபத்தில் இறந்து விட்டார். அவர் இறந்ததை பார்த்து அவரது அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நாகராஜனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 00:07:03
Privacy-Data & cookie usage: