பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் பலி! 4 பேர் காயம்

schedule
2017-10-05 | 18:01h
update
2026-09-10 | 01:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Auto mishap near Perambalur accident: 2 killed 4 people were injured

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம்சீகூர் அருகே டூவீலர் மீது ஷேர் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர்: 4 பேர் படுகாயமடைந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவள்ளுவன் மகன் நெப்போலியன்(28), இவர் இன்றுஇரவு திட்டக்குடியிலிருந்து கீழப்பெரம்பலூர் நோக்கி டூவீலரில் (ஸ்கூட்டியில்) தனியார் பள்ளி எதிரே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கீழப்பெரம்பலூரிலிருந்து 10க்கும் மேற்ப்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த ஷேர் ஆட்டோ நெப்போலியன் ஒட்டி சென்ற டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் நெப்போலியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கைப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செங்கமலை(62), கணபதி மனைவி மலர் (45), இளங்கோவன் மகன் குமார்(26), அகரம்சீகூரை சேர்ந்த செல்வராசு மனைவி சாவித்திரி (40), ஷேர் ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ் உட்பட 5பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி செங்கமலை இறந்தார்.

இதனிடையே விபத்து பற்றி தகவலறிந்த நெப்போலியன் மற்றும் செங்கமலையின் உறவினர்கள் உள்ளிட்ட பொது மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, விபத்திற்கு காரணமான ஆட்டோவை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். உடனடியாக தீயை அருகில் இருந்தவர்கள் அணைத்தனர்.

இதனையடுத்து அகரம்சீகூர்&மருதையான்கோவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

ஆனால் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனால் மங்களமேடு போலீசார் மற்றும் அதிவிரைவு படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்த கலைத்து போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி.,திஷாமித்தல் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துதலைமறைவான ஷேர்ஆட்டோ டிரைவர் பாக்யராஜை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.09.2026 - 01:00:35
Privacy-Data & cookie usage: