Awareness about from house to house toilet, Collector vows full health in TamilNadu !

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுவதை வலியுறுத்தி வீடு வீடாக சென்று கலெக்டர் நடராஜன் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் துாய்மை பாரதம் திட்டத்தில் விழிப்புணர்வு பணி துவக்க விழா ராமநாதபுரம் ஒன்றியம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் நடந்தது.

கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து வீடு வீடாக சென்று, தனிநபர் இல்ல கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தில் கையொப்பம் பெற்றார். பின் வீட்டில் இருப்பவர்களிடம் கழிப்பறை அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள வைத்தார். பின் மக்களிடம் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:

ஊரக பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ருபாய் மானியமாக வழங்கப்படுகிறது. முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தை அடிப்படையாக ொண்டு மாவட்டத்தில் தனிநபர்கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து அனைத்து வீடுகளிலும் புதிய கழிப்பறைகள் கட்டுவதுடன் 100 சதவீதம் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 4 நகராட்சி 7 பேருராட்சிகளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 429 ஊராட்சிகளில் 412 ஊராட்சிகள் முழு சுகாதார ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 16 ஊராட்சிகளில் 3.37 கழிப்பறைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.

ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹென்சி லீமா அமலினி, ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், தாசில்தார் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!