Awareness of Environmental Protection on behalf of the Rotary program: Guinness World Record attempt: Tomorrow’s
பெரம்பலூர் ரோட்டரி இண்டர்நேசனல் மாவட்டம் 3000 சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில், பெரம்பலூர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தந்தை ரோவர் மெட்ரிக்குலேசன் பள்ளியும், வள்ளலார் ஹோண்டாவும் இணைந்து 500 மாணவர்களை கொண்ட குழுவாக சைக்கிள் விழிப்புர்ணர்வு ஊர்வலமும், 2100 பள்ளி மாணவர்களை கொண்டு சைக்கிள் வடிவத்தில் நின்று சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
இந்நிகழச்சி கின்னஸ் சாதனைக்காகவும் முயற்சிக்கப்படுகிறது என்றும், இந்நிகழச்சியை பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா மற்றும் மாவட்ட ரோட்டரி கவர்னர்கள் பி. கோபாலகிருஷ்ணன், ஆர்.வி.என். கண்ணன் , ரோட்டரி சங்க சிறப்பு திட்ட இயக்குனர் ஆனந்தஜோதி, மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தாமரை கண்ணன், கிருஷ்ணன், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது ரோவர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், அம்பி (எ) கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.