Awareness Training Skills in Puthuchatiram near Namakkal: Collector Information

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன்விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் பற்றி கிராமப்புற வேலை நாடுநர்களை சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா நாளை மறுநாள் (11ம் தேதி) காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.

இதில் 5ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அழகு கலை, தையல் பயிற்சி, பெட் சைட் அசிஸ்டெண்ட், சிசிடிவி கேமரா பொருத்தும் பயிற்சி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பயிற்சி, எலக்ட்ரீசியன், வெல்டர் பயிற்சி, லேத் ஆப்ரேட்டர் பயிற்சி, ஆட்டோ மேட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன் பயிற்சி மற்றும் டிரைவிங் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்நிறுவனங்களால் அளிக்கப்படும் பயிற்சிகளில் தாங்கள் விருப்பப் படும் திறன் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

மேலும் இப்பயிற்சியின் போது போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுது பொருள் புத்தகப்பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே இத்திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளாவில் கலந்து கொண்டு திறன்பயிற்சிக்கு பதிவு செய்து விரும்பும் பயிற்சியை இலவசமாக பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!