நாமக்கல் அருகே லாரி மோதியதால் காரில் சென்ற ஐயப்ப பக்தர் பலி

schedule
2018-12-24 | 17:55h
update
2018-12-24 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ayyappa devotees who killed in a car collision with a truck near Namakkal

Advertisement

நாமக்கல் மாவட்டம், மேகனூர் அருகே லாரி மோதியதால் காரில் சென்ற ஐயப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாரதி (23). இவர், திருப்பூரில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அவரது தந்தை மணிவேலும், பாரதியும் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்துள்ளனர். அதில், மணிவேல் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்வதற்காக, ப.வேலூர் அடுத்த பொத்தனூர் சென்றார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக சம்பவத்தன்று காலை பாரதி தனது காரில் ப.வேலூர் நோக்கிச் சென்றார்.

கீழ்பாலப்பட்டி அருகே சென்றபோது எதிரே சர்க்கரை ஆலையில், பக்காஸ் ஏற்றுவதற்காக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பாரதி உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடநத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 21:22:45
Privacy-Data & cookie usage: