பெரம்பலூரில் பிரபல பர்னிச்சர் கடையில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்: கேஷ் லாக்கரை அலேக்காக தூக்கி சென்றனர்!

schedule
2022-09-26 | 09:39h
update
2022-09-26 | 10:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bale robbers who showed up at a popular furniture store in Perambalur: took away the Cash locker!

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வசந்த் & கோ நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. பணியாளர் சதீஷ் இன்று காலை கடையை திறப்பதற்காக இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

கொள்ளையர்கள் கடையின் உள்ள இருந்த சுமார் 150 கிலோ எடையுள்ள லாக்கரை எடுத்து சென்றனர். லாக்கரில், சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் நடந்த வியாபாரத்தின் பணம் ரூ. 3,36,336 / எடுத்து சென்றனர். 2 நாட்கள் விடுமுறை என்பதால் வங்கியில் பணம் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 08:33:53
Privacy-Data & cookie usage: