ட்ரோன்கள் பறக்க தடை: பெரம்பலூர் மாவட்டத்திற்கு, முதலமைச்சர் வருகையால், கலெக்டர் உத்தரவு!

schedule
2022-11-26 | 19:36h
update
2026-08-31 | 12:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ban on flying drones: Perambalur district, due to Chief Minister’s visit, collector orders!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரும் நாளை பெரம்பலூர் எறையூர் சிப்காட் தொழில்பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், அன்று மாலை அரியலுார் மாவட்டத்திற்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு, 29.11.2022 அன்று காலை அரியலுார் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

Advertisement

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, அரியலூர் சென்று மீண்டும் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் வரை எந்தவித ட்ரோன்களும் இயக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே 28.11.2022 மற்றும் 29.11.2022 ஆகிய இரண்டு நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 12:16:02
Privacy-Data & cookie usage: