கற்கும் பாரதம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு

schedule
2017-08-16 | 17:08h
update
2026-06-28 | 16:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Basic Literacy Examination for beneficiaries through the Learning Bharat (karkum bharatham) Scheme

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் 15 வயதிற்கு மேல் 80 வயதிற்குள் எழுத, படிக்க தெரியாதவர்கள் அனைவருக்கும் வரும் ஆக20 அன்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 230 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வானது நான்கு ஒன்றியங்களில் உள்ள 17 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடு நிலைப் பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இத் தேர்வினை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்ற கல்லாதவர்களும் இத்தேர்வினை எழுதலாம். மேலும் கடந்த முறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 16:53:19
Privacy-Data & cookie usage: