முன்விரோதம் காரணமாக இருவர் அடித்துக் கொலை : கணவன், மனைவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

schedule
2018-09-24 | 16:09h
update
2026-04-14 | 11:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Before the two men struck killed by Pre-hostility: husband, wife and 10-year prison sentence

நாமக்கல் : பரமத்தி அருகே முன்விரோதம் காரணமாக இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன், மனைவிக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பரமத்தி அருகே ஆண்டிபுதுார் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனிசாமி (50). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (எ) முத்துசாமி (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த பழனிசாமி, அண்ணாதுரையை தாக்கியுள்ளார். இதை தடுக்க முற்பட்ட ரவி (40) என்பவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில்,படுகாயமடைந்த அண்ணாதுரை, ரவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக பழனிசாமி, அவரது மனைவி சரஸ்வதி (40), மகன்கள் விமலாதித்தன் (27), விக்கிரமாதித்தன் (27) ஆகிய நால்வர் மீதும் பரமத்தி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில்,இன்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி பழனிசாமி, அவரது மனைவி சரஸ்வதி ஆகிய இருவருக்கும் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.மேலும், அவர்களது மகன்கள் விமலாதித்தன், விக்ரமாதித்தன் ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுவித்து உத்திரவிடப்பட்டது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 11:01:14
Privacy-Data & cookie usage: