பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை சார்பில் குழந்தையின்மைக்கான மருத்துவ முகாம் பாடாலூரில் நடந்தது.

schedule
2018-08-26 | 16:00h
update
2026-03-08 | 09:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

behalf of Perambalur Lakshmi Hospital Medical Camp for Infertility in padalur.

பெரம்பலுார் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து, நடத்திய குழந்தையின்மைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமில் 149 பேர் பங்கேற்றனர்.

Advertisement

பெரம்பலுார் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை சார்பில், குழந்தையின்மைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் பாடாலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

முகாமை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கருணாகரன் தொடக்கி வைத்தார். இந்த முகாமில், மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு டாக்டர் ஜெயலட்சுமி தலைமையில், டாக்டர்கள் விஜயன், செந்தமிழ்ச்செல்வி, சசிகலா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

முகாமில், கரு முட்டை குழாய்களில் அடைப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதற்கான பரிசோதனை, பைப்ராய்ட் அடினோ மையோஸிஸ் எண்டோமெட்ரியோஸிஸ், ஓலி கோஸ்பெர்மியா, அசூஸ்பெர்மியா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் 149 பேர் பங்கேற்றனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் சந்திரமெளலி, நர்சுகள் விஜயராணி, தேவி, செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.03.2026 - 09:54:04
Privacy-Data & cookie usage: