பெல்காம் : தேசிய அளவிலான ஸ்கேடிங் விளையாட்டு போட்டி : தமிழக வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

schedule
2016-12-27 | 18:00h
update
2026-06-26 | 21:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Belgaum: Nationwide scatting the competition: Tamil Nadu athletes won medals.
பெல்காமில் நடந்த தேசிய அளவிலான ஸ்கேடிங் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பிலான மாநில அளவிலான ஸ்கேடிங்கிற்கான தேர்வு போட்டிகள் அக்டோபர், 22,23,24 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டிகளில் தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் 20.12.2016 முதல் 25.12.2016 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றனர்.

இப்போட்டிகளில் இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு விளையாடிய சென்னை மிக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவி மீனலோக்ஷினி ரிங் 3-ல் வெள்ளிப்தக்கமும், ரிங் 4-ல் வெங்கலப்பதக்கமும், சென்னை ஸ்பார்ட்டன் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். ஸ்யாம்கணேஷ் ரிங் 1-ல் வெள்ளிப் பதக்கமும், முகமது சதாக் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யஸ்ரீ ரிங் 2-ல் ஒரு வெங்கலப்பதக்கமும், கோயமுத்தூர் எஸ்.கே.பி. மெட்ரிக் பள்ளி மாணவன் ஸ்னேகன் ஒரு வெங்கலப் பதக்கமும் வென்று தமிழகத்திற்கு சிறப்பு செய்தனர்.

இப்போட்டிகளில் அணிப் பயிற்சியாளராக பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜி.அறிவேல், பி.தட்சிணாமூர்த்தி, பி.செங்கதிர் ஆகியோரும், அணி மேலாளராக உடற்கல்வி ஆசிரியர்கள் வி.லோகேஷ், கே.பாலாஜி மற்றும் ஆர்.அறிவழகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 21:57:37
Privacy-Data & cookie usage: