பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு அலுவலகம் கட்ட பூமிபூஜை!

schedule
2020-05-27 | 18:27h
update
2020-05-27 | 18:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bhoomi Pooja to for Perambalur district Home Guard police force!

பெரம்பலூர், ஜன.28- பெரம்பலூர் கடைவீதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மண்டல தளபதி சொந்த நிதியில் இருந்து ரூ.5லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

Advertisement

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பூஜைகளை செட்டிகுளம் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.

இதில் ஊர்க்காவல்படை மண்டல கமாண்டர் ராம்குமார், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், அரிமா சங்க மாவட்ட தலைவர் இமயவரம்பன், ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாரத் கார்த்திக், ஊர்க்காவல் படை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் போக்குவரத்து போலீசாருக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு முகக் கவசங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 09:38:46
Privacy-Data & cookie usage: