பெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரம்?  பைக்கை கொளுத்திய மர்ம நபர்கள்! வாலிபர் போலீசில் புகார்!

schedule
2019-11-19 | 07:22h
update
2019-11-19 | 07:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bike Burnt mystery people! youth complains to police! the illigal affair near in Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் சரவணன் (வயது 34), கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அருகே உள்ள திருப்பெயர் கிராமத்திற்கு நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது, அவரது பைக்கை சாவடி என்ற பகுதியில் நிறுத்தி விட்டு, அப்பகுதியில் வசிக்கும் அபிராமி என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. சரவணன் திரும்பி வந்து பார்த்த போது, இங்கு நிறுத்தி நின்ற பைக்கை மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து கொளுத்து விட்டனர். இதை வந்து பார்த்து திடுக்கிட்ட சரவணன் பெரம்பலூர் போலீசார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன், கணவனை இழந்த அபிராமியுடன் பழகி வந்ததும், வந்து செல்வதும் தெரியவந்தது. இதை பிடிக்காத மர்ம நபர்கள், அவரது, வாகனத்தை கொளுத்தி விட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 10:53:17
Privacy-Data & cookie usage: