பைக்

பஸ் நேருக்கு நேர் மோதல்; ரவுடி பலி!

schedule
2022-04-04 | 19:01h
update
2022-04-04 | 19:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bike – bus head-on collision; Rowdy kills!

பெரம்பலூர் புறநகர் பகுதியான ஆத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங் அருகே இன்று இரவு பைக் ஒன்று நேருக்கு நேர் தனியார் பேருந்து மோதியதில் ரவடி சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாமாக உயிரிந்தார்.

இன்று மாலை சுமார் 7 மணி அளவில், பெரம்பலூர் புறநகர் பகுதியான ஆத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் அருகே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், அதிவேகமாக அவருக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, மலையாளப்பட்டியில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில், இறந்த போ வாலிபர் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள காந்தி நகரை சேர்ந்த அய்யாறு மகன் விஜய் @ சின்னத்தம்பி (22), என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சின்னத்தம்பியின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இறந்த சின்னதம்பி மீது பெரம்பலூர் 3 வழக்குகள் உள்ளன. மேலும், காவல் துறையினரின் ரவுடி பட்டியலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேப்பநதட்டை காமராஜர் நகரை சேர்ந்த பஸ் டிரைவர் கேசவன் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 20:59:35
Privacy-Data & cookie usage: