பெரம்பலூர் அருகே பைக்- கார் மோதல்; மஞ்சள் வியாபாரி பலி!

schedule
2024-03-03 | 15:16h
update
2024-03-03 | 15:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bike-car collision near Perambalur; Turmeric merchant killed!

பெரம்பலூர் அருகே பைக்கும் காரும் மோதிக் கொண்டதில் கேராளவை சேர்ந்த மஞ்சள் வியாபாரி பலியானார்.

Advertisement

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாதிரிகல் பகுதியை சேர்ந்தவர் நஜீம் (43) மஞ்சள் வியாபாரி. இவர் வியாபாரம் தொடர்பாக கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வந்துள்ளார். வேலை முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் கேரளாவை நோக்கி, பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கனூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெங்களூரில் இருந்து விருதுநகருக்கு தனியார் சிமெண்ட் கம்பெனி உதவி மேலாளர் ராமச்சந்திரன் (61) என்பவர் சென்ற கார், நஜீம் சென்ற பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக் தூக்கி வீசப்பட்டதில் நஜீம் படுகாயம் அடைந்தார். பின்னர், அவ்வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நஜீமை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையின் போது நஜீம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.08.2026 - 21:49:25
Privacy-Data & cookie usage: