பெரம்பலூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி!

schedule
2023-09-06 | 13:35h
update
2023-09-06 | 14:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bikes collide head-on near Perambalur: Two killed!

பெரம்பலூர் அருகே இன்று பிற்பகலில் 2 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்த ஏற்பட்ட விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்த முருகன் மகன் தயாநிதி (20), இவரது உறவினரான ஆண்டிமடம் அருகே உள்ள கொடுக்கூரை சேர்ந்த செல்வம் மகன் சக்திவேலை அழைத்து கொண்டு பெரம்பலூரை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். பெரம்பலூர் – அரியலூர் சாலையில் பேரளி சுங்கசாவடி அருகே முன்னே சென்ற லாரியை கடக்க முயன்றனர். அப்போது பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற பைக் மீது மோதியது. இதில் எதிர் பைக்கில் வந்த அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சம்பத் (63), மற்றும் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.கால் முறிவு ஏற்பட்ட தயாநிதி , பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சக்திவேல், சம்பத்தின் உடல்கள், உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 01:41:21
Privacy-Data & cookie usage: