பெரம்பலூர் அருகே மின்வாரிய ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜக பிரமுகர் கைது!

schedule
2019-05-15 | 15:09h
update
2019-05-15 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

BJP man arrested for preventing TNEB worker near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர் அருகே உள்ள குடிக்காடு கிராமத்தில், மின்வாரிய ஊழியரை பணியாற்ற விடாமல் தடுத்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கைது செய்யப்பபட்டு, பின்னர், பிணையில் விடுவிக்கப்பபட்டார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 51) இவர் வேப்பூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நடப்பு மாதம் பெருமத்தூர்குடிக்காடு பகுதியில் மின்கட்டணம் செலுத்தாத உள்ள மின்இணைப்புகளை துண்டிக்க பெருமத்தூர்குடிக்காடு, நடுத்தெருவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் மதியழகன் (வயது 43) வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கோவிந்தராஜை பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், அவரை தரக்குறைவாக பேசி கன்னத்தில் அறைந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜ் மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மதியழகனை கைது செய்த போலீசார், பின்னர், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 05:36:03
Privacy-Data & cookie usage: