பெரம்பலூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் வெடி விபத்து: குழந்தை பலி! 2 பேர் காயம்!

schedule
2022-09-09 | 10:21h
update
2022-09-09 | 16:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Blast accident at temple kumbabhishekam near Perambalur: 3 people including 1 child injured!

பெரம்பலூர் மாவட்டம், அரசலூர் கிராமத்தில் இன்று கிராம மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வானவெடிகள் விடப்பட்டது. அதில் ஒன்று தவறி, பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் வந்து விழுந்தது.

Advertisement

இதில், திருச்சி மாவட்டம், சிக்கத்தம்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் . சுரேஷ் (36), திருச்சி மாவட்டம், சோபனாபுரத்தை சேர்ந்த சரவணன் மனைவி பிரியா (21), ஆகிய இருவருக்கும் முதுகில் லேசான காயம் ஏற்படட்டது.

அரசலூரை சேர்ந்த ராஜ்குமார் மகன் லலித் (7) என்பவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுயநினைவின்றி இருக்கும் , அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் லலித்கிஷோர் இறந்து விட்டார்.

இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.08.2026 - 17:59:39
Privacy-Data & cookie usage: