Block Level Private Sector Placement Camp: Perambalur Collector Information!

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மற்றும் வேப்பூர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.03.2023 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேப்பூர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் வேப்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, கலை அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் படித்துள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (இருபாலர்) கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்,

மேலும் விவரங்களுக்கு 04328-225 362 என்ற தொலைபேசி எண்ணையும், 94440 94325 என்ற அலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!