Blood Donate camp is a kind of dengue awareness in the Ramanathapuram Government Arts College

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பில் முன்மாதிரியாக திகழும் விதமாக அரசு கலைக்கல்லுாரி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ரத்த தான முகாம் முலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இம்முகாமினை ராமநாதபும் மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறையினர் கடந்த சில நாட்களாக கிராமங்கள் தோறும் சென்று சுகாதார மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

இதுதவிர கிராமங்களில் தனிநபர் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு நாட்டுநல பணித்திட்ட மாணவர்கள் விளக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களோடு இணைந்து ராமநாதபுரம் மாவட்ட மருத்துவப்பணி சுகாதார துறையனரும் இணைந்து கிராமங்கள் தோறும் துாய்மை குறித்தும் கழிப்பறை பயன்பாடு குறித்தும், டெங்கு விழிப்புணர்வு குறித்தும் டாக்டர்கள் கலைராஜன், மகேஸ்வரி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் விதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் டாக்டர்கள் குழுவினர் விரிவாக கிராம மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல் பரவுவது தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு விதமாக தற்போது ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறை, மாவட்ட மருத்துவப்பணி சுகாதாரம் துறை, ராமநாதபுரம் அரிமா சங்கம் இணைந்து கல்லுாரி வளாகத்தில் விழிப்புணர்வு ரத்ததான முகாம் நடத்தினர்ர.

ரத்ததான முகாமை ராமநாதபும் மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பேராசிரியர் குருசாமி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார. சுகாதாரத்துறை காவானுார் மருத்துவ அலுவலர் டாக்டர் கலைராஜன், ராமநாதபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் சுகாதார துறையினர் ரத்தான முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்ததானத்தின் அவசியம், டெங்கு வழிப்புணர்வு குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

ரத்ததான முகாமில் கல்லுாரி மாணவ மாணவிகள் 70 பேர் ரத்த்தானம் வழங்கினர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் விநாயகமுர்த்தி தலைமையில் அலுவலர்கள் ரத்தம் சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முகாமில் சுகாதார ஆய்வாளர் நம்பு சீனிவாசன், வட்டார மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், கல்லுாரி பேராசிரியர்கள் அர்ச்சுனன், பாஸ்கரன், விளையாட்டு துறை உடற்கல்வி இயக்குனவர் சந்திரசேகரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!