பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதிய “கழகத்தின் கதை” புத்தக வெளியீட்டு விழா

schedule
2017-07-03 | 14:59h
update
2026-04-20 | 11:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Book release ceremony of the ” kalakathin kathai” written by PMK Ramadoss

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள எம்.எஸ்.ஆர் ஹோட்டலில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எழுதிய கழகத்தின் கதை என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது.

பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் க.வைத்திலிங்கம், தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் க.செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரெ.கண்ணன், மாவட்டத் தலைவர் க.திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

கழகத்தின் கதை என்கிற புத்தகத்தை வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, புத்தகத்தை வெளியிட பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் திலகபாமா பெற்றுக் கொண்டு கருத்துரை வழங்கினார். இதே போன்று வன்னிய எழுத்தாளன். கண்மணி குணசேகரனும் கருத்துரை வழங்கினார்.

பா.ம.க. நிறுவனர் ராமததாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது பேசியதாவது : அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணி ஒரு போதும் கிடையாது. ‘இதைச் சொல்வதற்கு தி.மு.க-விடம் இருந்தே வார்த்தைகளைக் கடன் பெற்றுக் கொள்கிறேன்… கார் உள்ளவரை, கடல் நீர் உள்ளவரை, பார் உள்ளவரை (டாஸ்மாக் பார் இல்லை… இது உலகம்!) பைந்தமிழ் உள்ளவரை திராவிடக் கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது!”

செய்தியாளர்கள் திமுக, அதிமுக உடன் கூட்டணியா என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கேள்வி கேட்கக்கூடாது என தெரிவித்தவர். மக்களோடும், ஊடகங்களுடன் தான் கூட்டணி. கொள்கை உள்ள கட்சிகள் சில உள்ளன. அவைகள் விரும்பினால், அவற்றினுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். முன்னாள் தர்மபுரி எம்.பி செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் கண்ணபிரான், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பிரபு, பெரம்பலூர் நகரசெயலாளர் சத்தியசீலன், பா.ம.க. செய்தி தொடர்பாளர் வடமலை உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 11:35:50
Privacy-Data & cookie usage: