பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 93.49 சதவீதம் பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது

schedule
2016-05-13 | 17:32h
update
2026-09-23 | 00:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு 147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்களும், 148. குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 14 வேட்பாளர்களும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மே மாதம் 5ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வோட்டார் சிலிப் வழங்கப்பட்டது.

Advertisement

அதன்படி, பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள மொத்த வாக்களர்கள் 2,78,389 ஆவர். இவர்களில் 2,69,989 நபர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வோட்டார் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இது 96.98 சதவீதமாகும். மேலும் வோட்டர் சிலிப் வழங்கப்படாத 8,400 நபர்களின் வோட்டர் சிலிப்புகள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள மொத்த வாக்களர்கள் 2,55,726 ஆவர். இவர்களில் 2,29,340 நபர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் வோட்டார் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இது 89.68 சதவீதமாகும். மேலும் 26,386 நபர்களின் வழங்கப்படாத வோட்டர் சிலிப்புகள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 5,34,115 வாக்காளர்களில் 4,99,329 வாக்காளர்களுக்கு வோட்டர் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இது 93.49 சதவீதமாகும்.

வோட்டர் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துவந்து வாக்களிக்கலாம், என
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 00:23:30
Privacy-Data & cookie usage: