கணவன் மனைவி இருவருக்கும் அரிவாள் வெட்டு: பெரம்பலூர் அருகே மதுப்பிரியர் வெறிச்செயல்!

schedule
2023-01-08 | 07:22h
update
2023-01-08 | 07:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Both husband and wife are cut with sickles: near Perambalur drug addict rampage!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த கொல்லிமலை மகன் கண்ணன் (45), 15வருடங்களுக்கு முன்பு மனைவி, மகன் பிரிந்து சென்று விட்டனர். இதனால், கண்ணன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, ஊரில் உள்ளவர்களுடன் சண்டையிட்டும், வந்துள்ளார். குடிப்பழக்கம் இருந்த நிலையில், இன்று காலை சுமார் 8.45 மணி அளவில், அதே பகுதியை சேர்ந்த பிச்சைப்பிள்ளை (49). இவரது மனைவி அமுதவள்ளி (42), அவரது வீட்டிற்கு வந்த போது, கண்ணன் கல்லை எடுத்து வீசி உள்ளார். இதனை தட்டிக்கேட்ட, அமுதவள்ளி, பிச்சைப்பிள்ளை ஆகிய இருவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதோடு, கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, இருவரையும் இடது கையில் வெட்டினார்.

Advertisement

இதனை பார்த்த கண்ணனின் தாய் தேவியையும், கீழே தள்ளி விட்டதில், அவருக்கும் நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனை பொதுமக்கள் கண்ணனுக்கு தர்ம அடி கொடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த பிச்சைப்பிள்ளை, அமுதவள்ளி இருவரும், பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணனும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பிரியர் போதையில் கணவன் மனைவி இருவரை கையில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 06:09:05
Privacy-Data & cookie usage: