குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி கல்வி அலுவலரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

schedule
2017-02-01 | 06:30h
update
2026-06-27 | 04:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Boxing competition at the state level to the second of the student meet and Educational Officers was greeting

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி ஆர்.சரண்யா, முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பெண்களுக்கான 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பெரம்பலூர் ஈடன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர். சரண்யா கலந்து கொண்டு, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து வெற்றிப் பெற்ற மாணவி ஆர்.சரண்யா பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் க.முனுசாமியை சந்தித்து தான் பெற்ற சான்றிதழ் மற்றும் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். குத்துச் சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று 2ம் இடம் பிடித்த மாணவி ஆர்.சரண்யாவை பாராட்டிய முதன்மைக் கல்வி அலுவலர் குத்துச் சண்டை போட்டிகளில் மேலும் பல்வேறு சாதனைகளை படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், தலைமையாசிரியர் பி.சேகர், உடற்கல்வி இயக்குநர் பி.சுதாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 04:04:06
Privacy-Data & cookie usage: