பெரம்பலூர் அருகே தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

schedule
2021-01-22 | 00:57h
update
2021-01-22 | 00:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Boy drowns near Perambalur

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கவிதா தம்பதியரின் இரண்டாவது மகன் பிரகாஷ் (வயது 11), நண்பர்களுடன் மேலப்புலியூர் ஏரிக்கு குளிக்க சென்று விளையாடி கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறுவனின் சடலத்தை மீட்ட அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மூலம் தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 03:13:01
Privacy-Data & cookie usage: