மருத்துவமனை உள்பட இரண்டு கடைகளில் ரொக்கம், பொருட்கள் பெரம்பலூரில் கொள்ளை

schedule
2017-07-05 | 08:41h
update
2026-05-01 | 19:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Break the lock of two shops, including the hospital, cash and goods robbed in Perambalur

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது ஜே.ஜே. நகர். அப்பகுதியில் மருத்துவர் சுதாகர் என்பவர் தோல் மற்றும் ரோமம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையும், காதர்பாட்சா என்பவர் பேன்சி ஸ்டோரும் , சுதாகர் என்பவர் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.

Advertisement

நேற்றிரவு கொள்ளையர்கள் மருத்துமவமனையின் பூட்டை அறுத்து எடுத்து, ரூ. 2 ஆயிரம் ரொக்கத்தையும் அருகே உள்ள காதர்பாட்சா கடையின் பூட்டை உடைத்து சீட்டு கட்டுவதற்காக வைத்திருந்த ரொக்கம் ரூ. 30 ஆயிரம் மற்றும் சோப், எல்.ஈ.டி., பல்புகள், மற்றும் செல்போன் ரீசார்ஜ் கார்டுகளையும், அருகே இருந்த சுதாகர் என்பவரின் ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 2 ஆயிரத்தையும் எடுத்து சென்றனர். கொள்ளை மதிப்பு சுமார் 50 ஆயிரம் இருக்கும் என தெரிய வருகிறது.

இது குறித்து மூவரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 19:32:59
Privacy-Data & cookie usage: