பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை சுமார் ஒரு லட்சம் கொள்ளை!

schedule
2021-03-03 | 15:34h
update
2021-03-03 | 15:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Breaking the lock of a house in broad daylight near Perambalur and robbing about one lakh of 6 pound jewelery!

பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் சுமார் ஒரு லட்சம் கொள்ளையடித்து மர்ம நபர்களை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 55). இவர் அப்பகுதியில் செங்கல் சூளையில் பணிபுரிந்து கொண்டு செங்கல் விற்கும் தரகராகவும் இருக்கிறார். இந்நிலையில் இவரது மனைவி விஜயா (வயது 48). வீட்டை பூட்டி விட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் வைத்திருந்து 6பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் சுமார் ஒரு லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவரழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்களை வைத்தும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 18:04:15
Privacy-Data & cookie usage: