Breaks back Door lock of AIADMK Celebrity house near Vepanthattai, robs 19-pound jewelery; Police investigation! 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை வட்டம், காரியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் கணேசன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து உள்ளிருந்த 19 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கணேசன் மற்றும் குடும்பத்தினர் இன்று, காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த தங்கராசு என்பவரது வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் மற்றும் தங்கராஜ் இருவரும் கை.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மங்கலமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கணேசனின் மகன் விஜய் (எ) மணிவண்ணன் (34) என்பவர் அஇஅதிமுக வேப்பந்தட்டை ஒன்றிய தொழிற்நுட்ப பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!