காதல் தோல்வியால் மதுவில் விஷம் கலந்து குடித்த தம்பி, போதையில் மீதியை குடித்த அண்ணனும் சாவு!

schedule
2018-12-23 | 18:17h
update
2018-12-23 | 18:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Brother drank wine mixed with poison, but the failure of love, drugs and drank the rest of the dead brother!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் புதூரை சேர்ந்தவர் ராஜா (வயது 28), லோடு ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். ராஜாவின் மனைவி சிலுவைக்கனி (27) கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், இவரது தம்பி விஜய் (26) கோவையில் தங்கி வேலை பார்த்து வந்ததில் அங்கு பக்கத்து ஊர் பெண்ணை ஒருவரை காதலித்து உள்ளார். அந்த பெண்ணுக்கு 3 பவுன் தங்க சங்கிலி, செல்போனும் வாங்கி கொடுத்துள்ளார்.

Advertisement

காதுலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், அவர், வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். காதலி பிரிவால் துக்கம் தாளாமல், கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய விஜய், மதுவில் விஷம் கலந்து குடித்த அவர் மயங்கி விட்டார். போதையில் அங்கு வந்த ராஜா தம்பி விஜய் மது அருந்தி விட்டு மீதி வைத்துள்ளதாக நினைத்து பாட்டிலில் இருந்த முழுவதையும் குடித்து விட்டார். விஷம் கலந்த மதுவை குடித்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் விஜயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது நடந்த காவல் துறை விசாரணையில், காதல் தோல்வியால் மதுவில் விஷம் கலந்து குடித்தாக தெரிவித்தார். சிகிச்சையின்போது விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். தட்டார்மடம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேலு சினிமா காமடி போல் நிஜத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Tuticorin
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 18:00:23
Privacy-Data & cookie usage: