பெரம்பலூர் அருகே கொடூரம்: குடிபோதையில் தந்தையை கடப்பாரையால் குத்தி கொன்ற மகன்! 

schedule
2022-10-05 | 16:24h
update
2022-10-05 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Brutality near Perambalur: father stabbed to death by Drunken son!

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (59). இவரது மகன் சதீஷ் (28). திருமணமாகதவர். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இன்று மாலை

Advertisement

குடிபோதையில் தகராறு செய்து தந்தை சக்கரவர்த்தியை கடப்பாரையால் நடு நெஞ்சினில் குத்தினார்.

இந்த சம்பவம் வீட்டின் ஹாலில் நடந்த போது இறந்த சக்கரவர்த்தி மனைவி அஞ்சலை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் , 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஊழியர்கள் பரிசோதித்த போது சக்கரவர்த்தி

இறந்துவிட்டதாக, கொடுத்த தகவலின் அடிப்படையில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சக்கரவர்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் இருந்த சதீசை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் மகனே பெற்ற தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 02:15:56
Privacy-Data & cookie usage: