பெரம்பலூர் அருகே பூட்டை உடைத்து வீட்டில் கொள்ளை முயற்சி: சிசிடிவி காட்சிகளுடன் உரிமையாளர் போலீசில் புகார்!

schedule
2023-09-28 | 16:38h
update
2023-10-01 | 07:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Burglary attempt at house near Perambalur: Owner complains to police with CCTV footage!

பெரம்பலூர் அருகே வீதியில் விளையாடிக் கொண்டிருந்த பதின்ம வயது சிறுவர்கள், வீட்டின் தபால் பெட்டியை உடைத்து சேதப்படுத்தி, தபால் உள்ளிட்ட ஆவணங்களை திருடியதோடு, வீட்டின் கேட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக செங்குணம் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் மருவத்தூர் போலீசில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

அந்தப் புகாரில், நேற்று அவர் வழக்கம் போல் அவர் பெற்றோர்கள் பெரியசாமி – வசந்தா ஆகியோருடன் பெரம்பலூர் வந்து விட்டு சுமார் 10 மணி அளவில் வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டி உடைத்து சேதப்படுத்தி, அதில் இருந்து தபால் உள்ளிட்ட ஆவணங்கள் எடுத்து சென்றிருப்பதும், வீட்டின் முன் பக்க கேட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது, அப்பகுதியை சேர்ந்த அச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் வந்ததால் தப்பி ஓடுவதும் தெரியவந்தது.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு கஞ்சா போன்ற போதை பழக்கம் உள்ளதாகவும், அதில் ஒருவர் கொலை வழக்கிலும் தொடர்புடையதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசர் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertiesment: https://dsmatrimony.net/

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 00:42:52
Privacy-Data & cookie usage: