பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர் உடல் கருகிய நிலையில் மீட்பு: போலீசார் விசாரணை!

schedule
2022-11-01 | 15:17h
update
2022-11-01 | 15:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Burned body of toll booth employee rescued near Perambalur: Police investigation!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமம் மூப்பனார் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் கோபால் (44) . இவரது மனைவி முனியம்மாள் (40) இந்நிலையில் கோபால் திருமாந்துறை சுங்கச்சாவடியில் ரோடு பேட்ரோலிங் ஆஃபீஸராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5:45 மணிக்கு வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய கோபால் சு.ஆடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளாற்றங்கரையில் உள்ள தகர கொட்டகையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். வேலை இழந்ததாலும், கடன் சுமையாலும், ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் தனக்குத் தானே உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தன், பேரில், சம்பவ இடத்திற்க விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 06:02:02
Privacy-Data & cookie usage: