குன்னம் அருகே பஸ்

லாரி மோதல்: மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்!

schedule
2022-04-22 | 17:15h
update
2022-04-22 | 17:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bus-lorry collision near Kunnam in Perambalur District: 15 injured, including students

பெரம்பலூர்: குன்னம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவ- மாணவிகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை வயலப்பாடி கிராமத்திற்கும் துங்கபுரம் கிராமத்திற்கும் இடையே காரைப்பாடி பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அரியலூர் மாவட்டம், பெரியத் திருக்கோணத்திலிருந்து, சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக் கொண்டு, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே தளவாய் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை நோக்கி அதிவேகமாக சென்ற ஒரு கனரக லாரி எதிரே வந்த அரசு பஸ்சின் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் லாரி டிரைவரான பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி(40), பஸ் டிரைவர் கணேசன்(35), நடத்துனர் ராஜ்குமார் உட்பட 9 பெண்களும், 1 குழந்தையும், 5 ஆண்களும் என 15பேர் படுகாயம் அடைந்து, அரியலூர் அரசு மருத்துவமனையில் 9 பேரும், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது திடீர் சாலை விபத்தில், விபத்துக்குள்ளான வாகனங்களின் இடிபாடுகளுக்கிடையே லாரி டிரைவர் சிக்கிக்கொண்டதால், அரியலூர்- அகரம்சிகூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த லாரி டிரைவரை 2 மணி நேரம் போராடி மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோடு, வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த திடீர் சாலை விபத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பும் நிலவியது. இதுகுறித்து குன்னம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் நல்லதம்பி அசதியில் கண்ணயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.06.2026 - 05:02:53
Privacy-Data & cookie usage: