அரசின் வெற்றிப்பயணத்தில் தனியார் பஸ்களையும் சேர்த்துக் கொள்ள பஸ் ஓனர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை!

schedule
2026-10-12 | 13:52h
update
2026-10-12 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Bus owners urge the Chief Minister to include private buses in the government’s successful journey.

பெரம்பலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அச்சங்கத்தின் சார்பில் ஸ்ரீதேவி டிரான்ஸ்போர்ட்ஸ் பஸ் அதிபர் ராம்குமார் பேசியதாவது:

“தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு… அரசுக்கு ஒரு இந்த ‘வெற்றி பயணம்’ திட்டம் சார்பாக கோரிக்கையை முன் வைக்கிறோம். இது ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டும் தான். எங்களோட கோரிக்கைகள் என்னவென்று… இன்றைக்கு எங்க தொழிலாளர்கள் முன்னெடுத்தாங்க, பெரம்பலூர் மாவட்டத்தில. அது சம்பந்தமான எங்க தொழிலில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமான கோரிக்கைகளை வைக்கிறோம். இந்த துறையில் நம்பி பணிபுரியும் 60,000 பேர் நேரடியாக பாதிக்கப்படுறாங்க. இந்த துறை சார்ந்து கிட்டத்தட்ட 2-லிருந்து 3 லட்சம் பணியாளர்கள் இருக்காங்க. மெக்கானிக், எலக்ட்ரீஷியன், கரூர்ல பஸ் பாடி கட்டுமான தொழில் இதுபோன்று. இந்த தொழில் நசிவடைந்துச்சுன்னா, ஒரு வாகனம் மூலம் 3 லட்சம் ரூபாய் அரசாங்கத்துக்கு வரி வருவாய் மட்டுமே வருது. ரோட் டாக்ஸ், ஜி.எஸ்.டி வருவாய் இதுபோன்று. இந்த தொழில் நல்லா இருந்தா ஆண்டுக்காண்டு புது வண்டி எடுக்கும்போது, அது மூலமா 8 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி வருவாய் வரும். கிட்டத்தட்ட 8,000 வண்டிகள்ல 10 லட்சம் ரூபாய் வச்சீங்கன்னா, கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிற துறை இது. இதைச் சார்ந்து கிட்டத்தட்ட 3 லட்சம் தொழிலாளர்கள் நம் தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிகிறார்கள். இப்ப இந்த தொழில் நசிவடையும்போது எங்களோடு சேர்ந்து அவங்களோட வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

நாங்க எங்களை மட்டும் நினைச்சு நாங்க இந்த போராட்டத்தை முன்வைக்கல. தயவுசெஞ்சு வரும் தலைமுறையினருக்கு, இப்ப பணிபுரிகிற தொழிலாளர்களுக்கு ஆட்டோமொபைல் துறை சார்ந்து முன்மாதிரியான மாநிலமா இன்னைக்கு தமிழ்நாடு விளங்கிட்டு இருக்கு. இந்த தொழில் நசிவடையும்போது இதனால வர பாதிப்பு இன்னும் ஒரு சில ஆண்டுகள்ல பெரிய அளவில் இருக்கும். அடுத்து இந்த துறை சார்ந்து படித்து வர இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும். இன்னைக்கு நாங்க மட்டும் பாதிக்கப்பட போறதில்லை. இன்னைக்கு எங்க தொழிலாளர்கள், நாங்க… நாங்களும் தமிழக மக்கள்தான். நாங்க பஸ் ஓனர், பஸ் டிரைவர், கண்டக்டர்னா நாங்க வேற ஆளும் கிடையாது. எங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் தமிழக அரசாங்கத்துக்கு இருக்கு. தயவுசெஞ்சு தமிழக முதலமைச்சர் அவர்களே, இந்த ‘வெற்றி பயணம்’ திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.”

Advertisement

செய்தியாளர்: அரசாங்கத்துல வந்து ஐ.ஏ.எஸ்-க்கெல்லாம் தெரியாம இந்த திட்டத்தை… டிரான்ஸ்போர்ட்ல நிறைய ஐ.ஏ.எஸ் செக்ரட்டரிஸ்லாம் இருக்காங்க. அவங்களாம் இந்த கால்குலேஷன்லாம் போட்டுருக்க மாட்டாங்களா? எவ்வளவு பேர் பாதிப்பாங்கன்னு அவங்களுக்கு கணக்கு தெரியாதா?”

பதில்: “இல்லை, அது எப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியல. மூணு மாசம்தான் இந்த ஆட்சி வந்து இருக்குது. இது உடனடியாக எடுக்கப்பட்டதனால் அதோட துறை ரீதியான பாதிப்பு என்னன்றது வரும் காலத்துலதான் தெரியும்.”
செய்தியாளர்: “சராசரியா எவ்வளவு கலெக்ஷன் உங்களுக்கு பாதிக்குது? எவ்வளவு பர்சண்டேஜ் பாதிக்குது உங்களுக்கு?”
பதில்: 70 சதவீதம் கலெக்ஷன் பாதிப்பு. ஏன்னா நாங்க இந்த துறையில கிட்டத்தட்ட 1946-லிருந்து ஈடுபட்டுட்டு இருக்கோம். இந்த துறையில இத்தனை ஆண்டு காலமாவே நாங்களும் ஒரு சேவை மனப்பான்மையோடதான் செஞ்சுகிட்டு வர்றோம். அட்லீஸ்ட் அந்த சேவை செய்றதுக்கு உண்டான மினிமம் அடிப்படைத் தேவையாவது கிடைச்சாதானே நாங்க தொழில் பண்ண முடியும்? இந்த துறையில நாங்க மட்டும் வாழணும்னு இல்லை, கார்ப்பரேஷனும் சிறப்பா செயல்படனும், நாங்களும் சிறப்பா செயல்படனும். அப்பதான் மக்களுக்கு ஒரு நல்ல சேவை கிடைக்கும். இன்னைக்கு இந்தியாவுலயே தமிழ்நாடுதான் மிக குறைந்த கட்டணத்துல சிறந்த சேவையோட செயல்பட்டுட்டு இருக்க மாநிலம் தமிழ்நாடுதான். இது மேலும் இப்ப இன்னும் நசிவடையுதுனா ஒன்னுமே பண்ண முடியாது.”

செய்தியாளர்: “இப்ப அரசு பேருந்து கட்டணத்தையும் குறைச்சிருக்காங்கா… இலவச பயணம் அறிவிச்சதுக்கு அப்புறம், கட்டண சேவையிலயும் கட்டணத்தை குறைச்சிருக்காங்க அரசு பேருந்துல. அது தனியார் பேருந்துல எந்த மாதிரி பாதிக்கும்னு நினைக்கிறீங்க?”

பதில்: “இல்லை இல்லை, ஒட்டுமொத்தமாவே இன்னைக்கு முடங்கும் நிலையில வந்துருச்சு. பாதிப்புகள் ஏற்கனவே ஏற்பட்டுருச்சு. இன்னும் இது ஒன்னு மாதிரி ஒன்னு ஒன்னா முன்னெடுக்க முன்னெடுக்க வாகனங்கள் நிற்கக்கூடிய நிலைமை வந்துரும்.”

வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் அரசு பஸ்களுக்கு வழங்குவது போல தனியார் பஸ்கள், மினி பஸ்கள் பங்கேற்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். பஸ் தொழில் தற்போது முழுமையான முடங்கும் அபாயத்தில் இருப்பதாகவும், (ஸ்ரீதேவி டிரான்ஸ்போர்ட்ஸ் போன்ற) தனியார் பஸ் நிறுவனங்கள் 1902 முதல் சுமார் 124 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், இந்தத் தொழில் மேலும் 100 ஆண்டுகள் தமிழக அரசுடன் இணைந்து இயங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் இந்திரா பஸ் ஓனர் ராஜசேகர், பாரத் பஸ் ஓனர்கள் ஜெயராமன் கார்த்திக், தீனதயாளன் பஸ் ஓனர் பாஸ்கர், ரெங்கநாதன் பஸ் உரிமையாளர் ராமநாதன், வளர்மதி பஸ் உரிமையாளர் மெய்யன் உள்ளிட்ட பல பஸ் ஓனர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.10.2026 - 14:05:34
Privacy-Data & cookie usage: