பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகைப் பணம் கொள்ளை; மோப்ப நாய் உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை!

schedule
2022-09-03 | 08:09h
update
2022-09-03 | 08:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

By breaking the back door of a house near Perambalur, Rs. 3.5 lakh worth of jewelery and cash stolen; With the help of a sniffer dog, the police investigated intensively!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் கீழ்கோடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் திருவேங்கடம் (40), விவசாயம் செய்து வருகிறார். நெல் அறுவடை செய்யும் எந்திரத்தின் டிரைவாக இருக்கிறார். நேற்றிரவு இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவில் உடைத்து, அதிலிருந்த 10 பவுன் தங்கநகைகள், ரொக்கம் ரூ. 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். திருடு போன வீட்டில், திருவேங்கடத்தின் மனைவி பரிமளா, அம்மா விஜயா, மற்றும் விஜயாவின் பேரக்குழந்தைகள் படுத்திருந்தனர்.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார், மோப்பா நாய் நின்ஜா சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடிக்க செய்தனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் கிடைத்த தடயங்களை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 19:17:10
Privacy-Data & cookie usage: