பெரம்பலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து, சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை!

schedule
2023-05-10 | 07:26h
update
2023-05-10 | 07:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

By breaking the window of a house in Perambalur, about Rs. 1 lakh worth of jewelery stolen!

Advertisement

பெரம்பலூர், எளம்பலூர் சாலை ரோஸ் நகரை சேர்ந்த சையர் முகமது மகன் சாகித் அப்ரிடி (25), காமராஜர் வளைவு அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை மூடிவிட்டு, வீட்டிற்கு இரவு 10.45 மணிக்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரொக்கம் ரூ. 90 ஆயிரம், மற்றும் முக்கால் பவுன் தோடு, ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அரைஞாண் கொடி மற்றும் கொலுசுகளை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து, சாகித் அப்ரிடி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:59:46
Privacy-Data & cookie usage: