By video conferencing: District Farmers Grievance Redressal Day meeting was held at Perambalur.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் வீடியோ கான்பிரசிங் மூலம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ ஆகும். 2020 நவம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 791.00 மி.மீ, பெய்த மழையளவு 702.81 மி.மீ. தற்சமயம் 85 ஆயிரத்து 455 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், வேளாண் பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிடவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கான கடன் அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் ரூ.1.6 இலட்சம் வரை அனைத்து வங்கிகளிலும் பிணையில்லாத கடன் பெற முடியும். மேலும் சரியான முறையில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவிகிதம் மட்டுமே வட்டி விதிக்கப்படும். நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு நமது மாவட்டத்தில் பயிர; காப்பீடு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் இ-அடங்கல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது கைபேசியில் இ-அடங்கல் செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் தங்களது நிலங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேளாண் பொறியியல் துறை மூலம் உழுவை வாடகை திட்டம், சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைக்க மானியம் வழங்குதல், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கத்தில் நுழைவு முகப்புப் பணிகள், கிராம அளவிலான வாடிக்கையாளா; இயந்திர சேவை மையம் அமைத்தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வயல் வரப்பு அமைத்தல், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைத்தல் பணிகளும் வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கத்தின்கீழ் வட்டார அளவிலான வாடிக்கையாளா; இயந்திர சேவை மையம் அமைத்தல், புதிய தோட்டக்கலை பண்ணை அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.

வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் சொட்டு நீர் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. கூட்டுபண்ணையம் அல்லது தொகுப்பு பண்ணையம் வேளாண் உற்பத்தியாளர் குழு மூலம் அமைத்திடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அப்போது பேசிய கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.


பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து விவசாயிகள் கானொளி காட்சியின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு பிரச்சனைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி அறுவடை காலத்தில் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதுபோல் மக்காச்சோளம் மற்றும் பருத்தியை அரசே கொள்முதல் செய்து மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், ஏரி, குளத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்கவும், துங்கபுரம் பகுதியில் மின்மாற்றியினை மாற்றி அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேப்பந்தட்டைப் பகுதியில் 60 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள கனவு திட்டமான சின்னமுட்லு அணைக்கட்டு திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .சி.ராஜேந்திரன், பெரம்பலூர் வருவாய்கோட்ட சப்-கலெக்டர் ஜே.இ.பத்மஜா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமார், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) சி.கருணாநிதி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!