உ.பி., பாலியல் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் வி.சி.,கட்சியினர் ஆர்ப்பாட்டம்

schedule
2020-10-03 | 02:38h
update
2020-10-03 | 02:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

VC parties protest in Perambalur condemning the U.P sexual incident

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் கடந்த மாதம் 14-ம் தேதி 19 வயது பட்டியலின இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

Advertisement

அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராடி வரும் நிலையில், இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் வி.சி கட்சி சார்பில் மண்டல செயலாளர் இரா.கிட்டு தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வி.சி கட்சி நிர்வாகிகளுடன் முகக்கவசம் அனிந்தும், சமூக இடைவெளியை கடை பிடித்தும் வாயிற் காத்திருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலித் பெண் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கைதை கண்டித்தும், பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 18:00:57
Privacy-Data & cookie usage: